முகப்பு
தமிழ்நாடு

அரசியல் அனுபவமில்லா குழந்தை அண்ணாமலை: சசிகலா

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை என சசிகலா விமர்சித்துள்ளார்.

Updated On : 13 ஜூன், 2023 at 10:18 PM
சசிகலா (கோப்புப் படம்)
பகிர்:

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை என சசிகலா விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பேச்சுக்களை புறந்தள்ளி மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய ஜெயலலிதா. அம்மா உணவகம் தந்து , அன்ன லட்சுமியாய் விளங்கிய ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

Advertisement

ஜெயலலிதாவை ஆறு முறை முதல்வராக்கி அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள். அவருக்கு தமிழக மக்கள் அளித்த இந்த நற்சான்றிதழே போதும். வேறு யாருடைய சான்றிதழும் தேவையில்லை.

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவரின் சாதனைகளை முறியடிக்க முடியாது. அண்ணாமலைக்கு ஜெயலலிதாவின் அரசியல் பயணம், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள் எதுவும் தெரியவில்லை.

அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன்.

இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களால் அண்ணாமலை அவர் சார்ந்து இயக்கத்திற்கே தமிழகத்தில் கெடுதலை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.