கோப்புப்படம் 
தமிழ்நாடு

பராமரிப்புப் பணி: விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியாக ரத்து

ஆந்திர மாநிலம், குண்டக்கல் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

DIN

விழுப்புரம்: ஆந்திர மாநிலம், குண்டக்கல் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆந்திர மாநிலம், குண்டக்கல் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக விழுப்புரம் - திருப்பதி இடையிலான விரைவு ரயில் ஜூன் 18-ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வண்டி எண் 16854- விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் விழுப்புரத்திலிருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். காட்பாடி- திருப்பதி இடையேயான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 16853, திருப்பதி - விழுப்புரம் விரைவு ரயில், திருப்பதியிலிருந்து காட்பாடி வரை ரத்து செய்யப்பட் டுள்ளது.

காட்பாடியிலிருந்து விழுப்புரம் வரை மட்டும் இந்த ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT