நாகர்கோவில்: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட து மத்திய அரசின் அடக்கு முறை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் சீமான் புதன்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரத்தை அவரவர் விருப்பப்படி நடத்துகிறார்கள்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வீட்டின் மதில் சுவர் ஏறி குதித்து கைது செய்தார்கள், முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டுக்குள் புகுந்து கைது செய்தனர்.
தேர்தல் நெருங்க நெருங்க இது போன்ற சம்பவங்களை அதிக அளவில் பாஜக நடத்தும். இந்த நடவடிக்கை எதிர்பார்த்ததுதான்.
இது ஒரு ஜனநாயக நாடு என்று நினைக்கிறோம், தேர்தல் ஆணையம், நீதிமன்றம், அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவை தன்னாட்சி அதிகாரம் படைத்த அமைப்பு என்று நாங்கள் நினைக்கிறோம். இவைகள் இன்று ஆட்சியின் 5 விரல்களாக உள்ளன. இது மத்திய அரசின் அப்பட்டமான அடக்கு முறை என்றார் அவர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.