கோப்புப்படம் 
தமிழ்நாடு

10 , 11-ம் வகுப்பு துணைத்தேர்வு: ஹால் டிக்கெட் எப்போது?

10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை வரும் ஜூன் 20 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

DIN

10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை வரும் ஜூன் 20 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 19 ஆம் தேதி வெளியாகின.

10 ஆம் வகுப்பு தேர்வில் தமிழ்நாடு முழுவதும் 91.39 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதுபோல 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 

இந்நிலையில், 10, 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவ, மாணவிகள் மே 23 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூன் 27 முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற உள்ளதாகவும் அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்திருந்தது. 

இதையடுத்து 10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு(ஹால் டிக்கெட்) ஜூன் 20 ஆம் தேதி முதல் பள்ளிக்கல்வித்துறையின் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT