கோப்புப்படம் 
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி விவகாரம்: ஆளுநரிடம் அதிமுக நிர்வாகிகள் மனு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து மனு அளிக்கின்றனர். 

DIN

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர். 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம், பெஞ்சமின், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுநர் ரவியை சந்தித்துப் பேசினர்.

சட்டவிரோத பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும்  தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் நிலவரம், சட்டம் -ஒழுங்கு பிரச்னைகள் குறித்தும் மனுவில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

முன்னதாக, செந்தில் பாலாஜியின் துறைகளை பிற அமைச்சர்களுக்கு மாற்றக் கோரி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலை மங்கும் நேரம்... திஷா பதானி!

சிவப்பு நிலா... திஷா பதானி!

டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடியுடன் பகிர்ந்த ரஷிய அதிபர்!

கார்த்தியின் வா வாத்தியார் என்ன ஆனது?

கேரமெல் அழகா?... கஜோல்!

SCROLL FOR NEXT