கைது செய்யப்பட்ட செல்வ பாலன் 
தமிழ்நாடு

முதல்வர், அமைச்சர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவு: தூத்துக்குடி பாஜக பிரமுகர் கைது 

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக தூத்துக்குடி பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

DIN

தூத்துக்குடி: தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக தூத்துக்குடி பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் குறித்து அவதூறு புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் புதன்கிழமை பரவியது. 

இதுகுறித்து தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி ராஜ் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஊரக டிஎஸ்பி சுரேஷ் உத்தரவின் பேரில் சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் புதுக்கோட்டை அருகே உள்ள கரிசல் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் செல்வபாலன் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது  5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT