கோப்புப்படம் 
தமிழ்நாடு

செந்தில் பாலாஜியை காணொலியில் ஆஜர்படுத்த திட்டம்!

செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த முடியாத சூழல் உள்ளதால் காணொளி வாயிலாக ஆஜர்படுத்த அமலாக்கத்துறை திட்டமிடப்பட்டுள்ளது.

DIN

செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த முடியாத சூழல் உள்ளதால் காணொளி வாயிலாக ஆஜர்படுத்த அமலாக்கத்துறை திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை காணொலி வாயிலாக ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை காணொலியில் ஆஜர்படுத்த நீதிமன்றம் அனுப்பிய அதிகாரிகள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்தனர்.

செந்தில் பாலாஜியை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் விசாரிக்கக் கோரிய வழக்கு தொடர்பாக நீதிபதி அல்லி கானொலியில் விசாரணை நடத்தவுள்ளார்.

முன்னதாக, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, திமுக சாா்பில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை நிராகரிக்கக் கோரியும், ஓமந்தூராா் மருத்துவமனையில் இருக்கும் அவரை காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதிக்கக் கோரியும், செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல், செந்தில்பாலாஜியை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சாா்பில் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த முடியாத சூழல் உள்ளதால் காணொளி வாயிலாக ஆஜர்படுத்த அமலாக்கத்துறை திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கன்னி

வங்கதேசத்தில் நிலநடுக்கம்; 6 பேர் பலி! அதிர்வுகளில் சிக்கிய இந்திய மாநிலங்கள்!

வார பலன்கள் - சிம்மம்

விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்: பேரவைத் தலைவர் அப்பாவு

வார பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT