தமிழ்நாடு

முதல்வர் குறித்து அவதூறு: காவலர் பணியிடை நீக்கம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக படங்கள் வெளியிட்ட நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த முதல்நிலை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக படங்கள் வெளியிட்ட நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த முதல்நிலை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

நெல்லை  மாவட்டம் களக்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பெருமாள். இவர் நெல்லை பெருமாள் என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை நேரில் சென்று பார்த்த தமிழக முதலமைச்சரின் புகைப்படத்தையும் வைத்து அதோடு காமெடி நடிகர் போண்டாமணியின் புகைப்படத்தையும் இணைத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு நடிகர் பிரபு நாதஸ்வரம் வாசிப்பது போன்ற காட்சியையும் இணைத்துள்ளார்.

இது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில வர்த்தக அணி இணை செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மாலை ராஜா தலைமையிலான திமுகவினர் நெல்லை  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து காவலர் பெருமாள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.

இந்த நிலையில் முதல் நிலைக் காவலர் நெல்லை பெருமாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல் தெரிவித்தார்.

இதனிடைய மாலை ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், துறையின் அமைச்சரான முதலமைச்சர் மீது அவதூறு பரப்பும் வகையில் முதல் நிலை காவலர் பதிவிட்டுள்ளார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். பணியிடை நீக்கம் செய்தது மட்டும் போதுமானது அல்ல என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT