வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனம் மரத்தில் மோதி விபத்து!
இலுப்பூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனம் விபத்துக்குள்ளானதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலுப்பூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனம் விபத்துக்குள்ளானதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் கலைச்செல்வி. புதுக்கோட்டையில் வசித்து வரும் இவர், தினமும் விராலிமலை அலுவலகம் வந்து செல்கிறார்.
இந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலை பணிக்கு ஜீப்பில் வந்த போது, இலுப்பூர் மேட்டுச் சாலை தனியார் கல்லூரி அருகே கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: முதல்வருடன் அமெரிக்க தூதர் சந்திப்பு
இதில் காயம் அடைந்த கலைச்செல்வி மற்றும் ஓட்டுநர் ராஜசேகர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து இலுப்பூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.