தமிழ்நாடு

தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

DIN


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தில் 2023-24 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜூன 16) வெளியானது. 

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பட்டப் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. 

இந்த நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு கடந்த மே 10 ஆம் தேதி வெளியானது. ஜூன் 9 ஆம் தேதி வரை  இணையதளம் மூலம் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த நிலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளக்கிழமை வெளியானது. 

இதில், விழுப்புரத்தைச் சேந்த மாணவி ஜி.வித்யாஸ்ரீ முதலிடம், மதுரையைச் சேர்ந்த பி.ஸ்ரீராம், தென்காசியைச் சேர்ந்த எஸ். முத்துலட்சுமி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மூன்று பேரும் 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். 199.5 மதிப்பெண்கள் 15 பேர் பெற்றுள்ளனர். 

தரவரிசைப் பட்டியல் www.tnau.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

தனிப்படை போலீஸாருக்கு தென்மண்டல ஐஜி பாராட்டு

சிவகாசியில் ரயிலில் அடிபட்டு தாய், மகள் பலி

தூய்மைப்பணி சுமை ஆட்டோ மோதியதில் இருவா் காயம்

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT