புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கருக்கங்குடி வழிதடத்தில் தமிழ்நாடு அரசு பேருந்து சேவையை தொடங்கி வைத்த புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கருக்கங்குடி, வளத்தாமங்கலம் பகுதிகளை இணைத்து பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மக்கள் கோரிக்கையை அடுத்து மாவட்ட மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனின் பெரும் முயற்சியால் காரைக்கால் முதல் கும்பகோணம் வரை செல்லும் தமிழக அரசு பேருந்து சுரக்குடி, கருக்கங்குடி, வளத்தாமங்கலம் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து அப்பேருந்து சேவை கருக்கங்குடியில் இருந்து தொடங்கப்பட்டது. இப்பேருந்து சேவையை புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஊர் மக்கள் பேருந்தில் ஏறி பயணம் செய்தனர். பேருந்து பயணத்தின் போது அமைச்சர் டிக்கெட் எடுத்து பயணம் செய்தார். அப்போது தமிழக பேருந்தில் ஆய்வா என்று ஒருவர் கேட்டதற்கு, நாங்கள் எல்லா பேருந்திலும் பயணம் செய்வோம் என்றும், அப்போது தான் நமது மாநில பேருந்திற்கு என்ன தேவைகள் இருக்கிறது, பேருந்தில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டியவை தெரிய வரும் என அமைச்சர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.