தமிழ்நாடு

பெண் வயிற்றிலிருந்த 36 கிலோ கட்டி அகற்றம்: கோவை மருத்துவர்கள் சாதனை!

பெண்ணின் வயிற்றிலிருந்து உடலில் சரிபாதி எடையில் வளர்ந்த 36 கிலோ எடை ஒவேரியன் ராட்சத கேன்சர் கட்டியை நுட்பமான அறுவை சிகிச்சையின் மூலம் கோவை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 

DIN

பெண்ணின் வயிற்றிலிருந்து உடலில் சரிபாதி எடையில் வளர்ந்த 36 கிலோ எடை ஒவேரியன் ராட்சத கேன்சர் கட்டியை நுட்பமான அறுவை சிகிச்சையின் மூலம் கோவை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தமிழ்ச்செல்வி. இவர் கடந்த 3 வருடங்களாக வயிறு வீக்கம் மற்றும் வலியினால் அவதிப்பட்டு இருக்கின்றார்.பின்னர் வயிறு வீக்கம் பெரிதாகி, மூச்சு விட முடியாமலும் திணறியதைத் தொடர்ந்து, அவர் ராமநாதபுரம் அருகே உள்ள வி.ஜி.எம் கேஸ்ட்ரோ மற்றும் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். 

அப்போது அவரை சர்ஜிகல் கேஸ்ட்ரோ என்ரோலஜிஸ்ட் மருத்துவர் மோகன் பிரசாத் வயிறு பகுதியில் பரிசோதித்து ஸ்கேனில் பார்த்த போது, தமிழ் செல்வியின் வயிற்றில் ராட்சச கட்டி வளர்ந்திருப்பது தெரிய வந்தது. சினைப்பகுதியில் உருவான இந்த கட்டி, நுரையீரல், குடல், சிறுநீரகம், ரத்த நாளங்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை அழுத்திக்கொண்டிருந்தன.

இந்த நிலையிலே சர்ஜிகல் கேஸ்ட்ரோ என்ராலஜிஸ்ட் துறை தலைவர் மருத்துவர் கோகுல் தலைமையில் கேஸ்ட்ரோ துறை, சிறுநீரக துறை, ரத்த நாள துறை, மயக்கவியல் துறைகளை சார்ந்த நிபுணர்களுடன் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் 30 நிமிடம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில், தமிழ் செல்வியின் வயிற்றுப் பகுதியிலிருந்த 36 கிலோ அளவிலான ராட்சத ஒவேரியன் கேன்சர் கட்டி அகற்றப்பட்டது. 

அந்த கட்டியின் எடை, உடல் குறைபாடுடன் வந்த தமிழ் செல்வியின் உடல் எடையில், சரி பாதி எடை. தற்பொழுது நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் குணமடைந்து வருகின்றார். இந்திய அளவில் உடல் குறைபாடுடன் வந்த ஒருவரின் வயிற்றிலிருந்து 36 கிலோ எடையுடன் கட்டி அகற்றப்பட்டது இந்திய அளவில் இது இரண்டாவது முறை. 

முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனையில் 40 கிலோக்கு மேல் எடையுடன் கூடிய கட்டி அகற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றன. இந்த நிலையில் வி.ஜி.எம். மருத்துவமனை மருத்துவர்கள் செய்த இந்த அறுவை சிகிச்சை இந்திய அளவில் இரண்டாதாகவும், தமிழ்நாடு அளவில் முதலாவது பெரிய கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

இந்த நுட்பமான அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர்கள், 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் உரிய முறையில் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

2025-ல் அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்கள் வெளியேற்றம்! - மத்திய அரசு தகவல்!

ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக வாதம்: மமதா பானர்ஜி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: பாக். கேப்டன்

SCROLL FOR NEXT