தமிழ்நாடு

கழிவுநீர் தொட்டி உள்ளே மனிதர்கள் இறங்கக் கூடாது: நகராட்சி நிர்வாகத் துறை

கழிவுநீர்த் தொட்டியை மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தக்கூடாது என்று நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

DIN

கழிவுநீர்த் தொட்டியை மனிதர்கள் இறங்கி சுத்தப்படுத்தக்கூடாது என்று நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

எந்தவொரு நிறுவனமோ அல்லது தனி நபரோ கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்தக்கூடாது, மனிதர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தப்படுத்த அனுமதியில்லை. 

அவ்வாறு மனிதர்கள் சுத்தப்படுத்தினால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை, ரூ. 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். 

அதுபோல, உரிமம் பெறாத லாரிகளை கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. விதிமுறைகளை மீறும் லாரிகளுக்கு முதலில் 25 ஆயிரம் ரூபாயும் 2-வது முறை ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும். 

மேலும் கழிவுநீரை திறந்த வெளி மற்றும் நீர்நிலைகளில் வெளியேற்றக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT