முகப்பு
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
தமிழ்நாடு

நீட் வேண்டாம் என்பதில் அதிமுக உறுதி: இபிஎஸ்

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:09 PM
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
பகிர்:

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் ஆத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் எதிர்ப்பில் அதிமுகதான் முதன்மையான கட்சியாக உள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாகவுள்ளது. நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடியது அதிமுக.

ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளியில் அதிகம் படிக்கின்றனர். 41% பேர் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு பெற்றதன் மூலம் ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனைச் செய்தது அதிமுகதான்.  

காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சிதான் நீட் தேர்வு வர காரணமாக இருந்தது. 

அதிமுக யாருக்கும் அடிமையில்லை. கொள்கை அடிப்படையில்தான் கூட்டணியே தவிர அதிமுக யாருக்கும் அடிமையில்லை. திமுகதான் தற்போது அடிமை கட்சியாக செயல்படுகிறது என விமர்சித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →