ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பாலாபிஷேகம். 
தமிழ்நாடு

ஆனி மாத முதல் ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலாபிஷேகம்!

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

DIN

நாமக்கல்: ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி, நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இங்கு, அனுமன் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல் பண்டிகைகள், அமாவாசை, பௌர்ணமி மற்றும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் ஆஞ்சனேயருக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அதன்படி, ஆனி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT