தமிழ்நாடு

பெண்களை கொச்சைப்படுத்துவதுதான் திராவிட மாடலா? - குஷ்பு கேள்வி

உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைப் பற்றிய இதுபோன்ற பேசுவதை நீங்கள் ஏற்பீர்களா? என்றும் இதுபோன்று பேசுவதை  முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கக் கூடாது

DIN


சென்னை: பெண்களை கொச்சைப்படுத்துவதான் திராவிட மாடலா? என்று கேள்வி எழுப்பியுள்ள நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைப் பற்றிய இதுபோன்ற பேசுவதை நீங்கள் ஏற்பீர்களா? என்றும் இதுபோன்று பேசுவதை  முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கக் கூடாது என்று குஷ்பு ட்விட்டரில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அசிங்கப்படுத்தி பேசுவது நல்லதல்ல, பெண்களை அவதூறாக பேச உரிமை கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ள குஷ்பு, பெண்களை கொச்சைப்படுத்துவதான் திராவிட மாடலா?  இதுபோன்று கேவலமாக பேசுவது திமுகவில் நிலவும் அரசியல் கலாசாரத்தை காட்டுகிறது. அவரைப்போல் திமுகவில் பலர் உள்ளனர். பெண்கள் குறித்து அவதூறாக பேசுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்ககூடாது. 

மேலும் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் குறித்து இதுபோன்று கொச்சைப்படுத்தி பேசுவதை நீங்கள் ஏற்பீர்களா? அவர் என்னை மட்டுமல்ல, உங்களையும் உங்கள் தந்தையைப் போன்ற சிறந்த தலைவரையும் அவமதிக்கிறார் என்பதை நீங்கள் உணரவில்லை. இதுபோன்று உங்கள் கட்சியினரின் மோசமான அவதூறான பேச்சுகளை நீங்கள் கண்டிக்காவிட்டால், அரசியலில் உங்களுக்கான மதிப்பை இழக்க நேரிடும். உங்கள் கட்சி அயோக்கியத்தனமான குண்டர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறி வருகிறது. இது ஒரு அவமானம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தவர்,  பெண்களை அவதூறாக பேச உரிமை கொடுத்தது யார்? எந்த ஒரு ஆணுக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணை பற்றிப் பேச தகுதி கிடையாது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தேசிய மகளிர் ஆணையம் மூலமாக தாமாக முன் வந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

ஒரு பெண்ணாக யாரும் என்னை சீண்டி பார்க்காதீர்கள், திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள். 

பெண்களை இழிவுப்படுத்துவோர் எந்த கட்சியினராக இருந்தாலும் அது தவறு தான். பெண்களை அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று குஷ்பு தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT