பெரியநாயக்கன்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி ஆதிவாசி பலி
பெரியநாயக்கன்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி ஆதிவாசி ஒருவர் பலியாகியுள்ளார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி ஆதிவாசி ஒருவர் பலியாகியுள்ளார்.
பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், தடாகம் காப்புக்காடு, தோலம்பாளையம் மேற்கு சுற்று, செங்குட்டை சரகத்தில் செங்குட்டை கிராமம் பழங்குடி இனத்தை சேர்ந்த திரு.மருதன் என்பவர் தடாகம் காப்புக்காட்டிற்குள் ஞாயிற்றுக்கிழமை சென்றவர் வீடு திரும்பவில்லை என்ற தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து இன்று பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக வனப்பணியாளர்கள் தேடுதல் பணியை தொடங்கினர். காலை சுமார் 6.45 மணியளவில் தோலம்பாளையம் மேற்கு சுற்று, செங்குட்டை சரகம், தடாகம் காப்புக்காட்டிற்குள் இறந்து கிடந்த நிலையில் மருதன் என்பவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இவர் யானை தாக்கி இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், காரமடை காவல் நிலையம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தோலம்பாளையம் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையும் படிக்க: சாலைவரி உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் - அன்புமணி
உடனடியாக காரமடை காவல் துறையினரால் இறந்த சடலமானது மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.