தமிழ்நாடு

சென்னையில் பெரிய அளவில் மழை பாதிப்பு இல்லை: பொறுப்பு ஆணையர் சமீரன் தகவல்

சென்னையில் பெரிய அளவில் மழை பாதிப்பு இல்லை என்று சென்னை மாநகராட்சி பொறுப்பு ஆணையர் சமீரன் தெரிவித்தார்.

DIN


சென்னையில் பெரிய அளவில் மழை பாதிப்பு இல்லை என்று சென்னை மாநகராட்சி பொறுப்பு ஆணையர் சமீரன் தெரிவித்தார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜூன்19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னையில் பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தாலோ, மரம் முறிந்திருந்தாலோ மற்றும் பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் பெரிய அளவில் மழை பாதிப்பு இல்லை என்று சென்னை மாநகராட்சி பொறுப்பு ஆணையர் சமீரந் தெரிவித்தார். 

அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சென்னையில் சராசரியாக 10 செ.மீட்டர் மழை பெய்தாலும் பெரிய அளவில் மழை பாதிப்பு இல்லை. 

சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 16 சுரங்க பாதைகளையும் கண்காணித்து வருகிறோம். 

மழையால் விழுந்த 30 மரங்கள் விரைந்து அகற்றப்பட்டு வருகின்றன.

மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 176 புகார்கள் வந்த நிலையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும், 30 மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் அவற்றை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

துணை ஆணையர்கள், அலுவலர்கள் ஆய்வில் உள்ளனர். தற்போது பெரிய வெள்ளப் பாதிப்பு எதுவும் இள்லை என்று சமீரன் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

நூறு கோடி வானவில்... மாளவிகா மனோஜ்!

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!

SCROLL FOR NEXT