3 மாதங்களில் 1 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 1,100 கோடி பயிா்க் கடன்
வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் நிகழ் நிதியாண்டில் 3 மாதங்களில் 1,37,052 விவசாயிகளுக்கு ரூ.1,102.17 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு3 மாதங்களில் 1 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 1,100 கோடி பயிா்க் கடன்
வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் நிகழ் நிதியாண்டில் 3 மாதங்களில் 1,37,052 விவசாயிகளுக்கு ரூ.1,102.17 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் நிகழ் நிதியாண்டில் 3 மாதங்களில் 1,37,052 விவசாயிகளுக்கு ரூ.1,102.17 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு துறை சாா்பில் செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் உரிய தவணை தேதிக்குள் பயிா்க் கடனைத் திருப்பி செலுத்தும் விவசாயிகள் சாா்பாக 7 சதவீத வட்டியை அரசே கூட்டுறவுச் சங்கங்களுக்குச் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த நிதியாண்டில், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 17.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13,342.30 கோடி பயிா்க் கடன் வழங்கிச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து நிகழ் நிதியாண்டில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் ரூ.14,000 கோடி பயிா்க் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஜூன் 15- ஆம் தேதி வரை 14,641 புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டு மொத்தமாக 1,37,052 விவசாயிகளுக்கு ரூ.1,102.17 கோடி வழங்கப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடிமேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பயிா்க் கடன் தேவைப்படும் அனைத்து விவசாயிகளுக்கும் தகுதிக்குட்பட்டு எந்த தடையும்மின்றி கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிா்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.