மழையும் மழை சார்ந்த படங்களும்.. இது சென்னை புறநகர் நிலவரம்
சென்னையின் புறநகர் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துகொண்டு அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் நேற்று மழை கொட்டித்தீர்த்த நிலையில், மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் துரித வேகத்தில் நடந்து முடிந்தன.
ஆனால், சென்னையின் புறநகர் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துகொண்டு அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
பழைய பல்லாவரம் அருகேயுள்ள கீழ்க்கட்டளை பெருமாள் நகரில்
மழைநீரோடு கலந்த கழிவுநீரில் பொதுமக்கள் தத்தளிக்கின்றனர்.
சாலையில் மழைநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்துகொண்டுள்ளது.
சென்னையில் பெய்த மழையில் சேதமடைந்த மடிப்பாக்கம் பிரதான சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் பெய்த மழையில் வேளச்சேரி ராம் நகர் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இல்லம் அருகே தேங்கியுள்ள மழைநீரில் மின்பகிர்மான பெட்டியின் அபாயத்தை அறியாமல் அதைப்பிடித்துக்கொண்டு மாணவ, மாணவிகள் சாலையில் நடந்து செல்கின்றனர்.