செந்தில் பாலாஜி கைது: அமலாக்கத்துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்றம் புகாரின் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்தனர். அப்போது நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
செந்தில் பாலாஜியை கைது செய்த போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவரது மனைவி மேகலா, மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்க | லாரிகளில் ஓட்டுநர்களுக்கு ஏசி கட்டாயம்! மத்திய அமைச்சர்
மேலும், செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசனிடம் கைது செய்யப்பட்டபோது தான் தாக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
இந்நிலையில், மனித உரிமை மீறல் புகார் குறித்து அமலாக்கத்துறையின் சென்னை மண்டல இணை இயக்குநர் 6 வாரத்தில் விளக்கமளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.