தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விடுக்கப்பட்ட வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விடுக்கப்பட்ட வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பால் பரபரப்பு நிலவியது. 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வந்து செல்கின்றனர். இந்நிலையில் காவல் கட்டுப்பாடு அறைக்கு வந்த அழைப்பில் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், விரைவில் வெடிக்கவிருப்பதாகவும் ஒரு நபர் கூறியுள்ளார்.

இதனையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், ரயில்வே காவல் துறையினர், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டும், அரசு இருப்புபாதை காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முழுவதும் சோதனை மேற்கொள்ளும் பணி நடைபெற்றது. ரயில்வே பயணிகளின் பைகளில் சோதனை நடத்தப்பட்டது. 

இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பை விசாரணை செய்த காவல் துறையினர் வியசார்பாடியை சேர்ந்த மனநலம் குன்றிய நபர் மணிகண்டன் (21) என்பது தெரியவந்தது.

இவர் ஏற்கனவே சென்ட்ரல் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT