தமிழ்நாடு

பாவூர்சத்திரத்தில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

பாவூர்சத்திரத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.  

DIN


பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.  

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பழைய காய்கனி சந்தை வளாகத்தில், வியாழக்கிழமை தோறும் ஆட்டுச் சந்தை நடைபெறும். ஜூன் 29 இல் பக்ரீத் பண்டிகை நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. 

பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், கடையம், கல்லூரணி, ராமச்சந்திரபட்டணம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 

ஆடுகளை வாங்குவதற்காக கடையநல்லூர், மேலப்பாளையம், தென்காசி, கடையம், ரவணசமுத்திரம்,பொட்டல்புதூர், வீராணம், புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் கேரளத்தில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள், மக்கள் வந்திருந்தனர்.

வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு, ஆடுகளை ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை கொடுத்து வாங்கிச் சென்றனா். 

வியாழக்கிழமை காலை முதல் 11 மணி வரை நடந்த சந்தையில் சுமார் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

SCROLL FOR NEXT