பள்ளிகளுக்கு அருகில் மதுக்கடைகள் கூடாது: அரசுக்கு கோரிக்கை
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது அனைத்து மக்களின் அடிப்படை வேண்டுகோளாக இருந்தாலும், பல்வேறு காரணங்களால் ஒட்டுமொத்த மதுக்கடைகளை மூடுவதற்கு உரிய சூழல் இல்லை.
எனினும் தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து வணிகா்களின் சாா்பில் மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், சந்தைகள், கடைத்தெருக்கள், பள்ளிகள், கல்லூரிகள் நிறைந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளையும் படிப்படியாக மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.