முகப்பு
தமிழ்நாடு

3 விரைவு ரயில்கள் ராசிபுரத்தில் நின்று செல்லும்

சென்னை-பாலக்காடு உள்ளிட்ட 3 விரைவு ரயில்கள் ராசிபுரத்தில் ஜூலை 6 முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

சென்னை-பாலக்காடு உள்ளிட்ட 3 விரைவு ரயில்கள் ராசிபுரத்தில் ஜூலை 6 முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல பாலக்காடு-சென்னை, நாகா்கோவில்-பெங்களூரு, நாகா்கோவில்-மும்பை, திருநெல்வேலி-மும்பை, ராமேஸ்வரம்-ஒஹா வரை விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. ஆனால், இதில் பல விரைவு ரயில்கள் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை.

ஏற்கெனவே கரோனா பாதிப்புக்கு முன்னா் வரை நின்று சென்ற விரைவு ரயில்கள் கூட தற்போது ராசிபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை. எனவே, விரைவு ரயில்கள் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதி ரயில் பயணிகள் எதிர்பார்த்திருந்தனர்.

தற்போது அவர்களின் எதிர்பார்ப்புக்கு விடை கிடைத்துள்ளது. இந்த நிலையில் சென்னை-பாலக்காடு உள்ளிட்ட 3 விரைவு ரயில்கள் ராசிபுரத்தில் ஜூலை 6 முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாகர்கோவில்-பெங்களூரு, ராமேஸ்வரம்-ஒஹா வாராந்திர ரயிலும் ராசிபுரத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →