மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 153 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 153 கன அடியாக சரிந்தது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வந்தது. வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 223 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து சனிக்கிழமை காலை 153 கன அடியாக சரிந்துள்ளது.
நீர் வரத்து சரிந்த நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | சென்னை மாநகராட்சி ரூ.100 கோடி மின்கட்டணப்பாக்கி: 20 மாதங்களில் வசூலிக்க மின்வாரியம் உத்தரவு
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.53 அடியாக சரிந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 59.20 டி.எம்.சி ஆக உள்ளது.