தமிழ்நாடு

மணப்பாறையில் மதுபோதையில் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் கைது

மணப்பாறையில் மதுபோதையில் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

DIN


மணப்பாறை: மணப்பாறையில் மதுபோதையில் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சூர்யாதேவி (28). சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், டிக்-டாக் பிரபலங்களை திட்டி அதனை சோசியல் மீடியாக்களில் விடியோவாக வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கம். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 21) மணப்பாறை காவல் நிலையத்தில் தனது கணவன் மருதுபாண்டி, தனது சகோதரர் தேவா ஆகியோர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்திருந்தார். அதேபோல் சூர்யாதேவி மீது தேவாவின் மனைவி கீர்த்திகா என்பவரும் புகார் அளித்திருந்தார். நேற்று இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சூர்யாதேவி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சனிக்கிழமை மதுபோதையில் காவல்நிலையத்திற்கு வந்த சூர்யாதேவி அங்கிருந்த போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில்  ஊற்றி தீக்குளிக்க முயல்வது போல் நாடகமாடினார். அப்போது அங்கிருந்த போலீசார் பெட்ரோல் கேனை பிடுங்கியதுடன் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். 

இது குறித்து தலைமைக் காவலர் லாரன்ஸ் அளித்த புகாரின் பேரில் அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக சூர்யாதேவி மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

பின்னர், சூர்யாதேவி மணப்பாறை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுதினர். அவரை அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவரை திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம்; பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் இல்லை: விஜய்

ராக் ஸ்டார் இயக்குநரின் புதிய பட வெளியீட்டுத் தேதி!

காவல்துறையினருக்கு பிறந்தநாள், திருமண நாளில் சிறப்பு விடுப்பு..! -கர்நாடக டிஜிபி உத்தரவு

பிகார் இளைஞரின் குடும்பத்தை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT