கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூன் 30 வரை மழை தொடரும்!

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக அங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

மேலும், தில்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த இரண்டு நாள்களாக அதிகளவில் மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தின் அடுத்த 5 நாள்கள் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூன் 30 வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண் கவர் பொருங்கோட... மேகா!

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

SCROLL FOR NEXT