தமிழ்நாடு

சென்னையில் தக்காளி விலை திடீா் உயா்வு: கிலோ ரூ. 80-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மொத்த விலையிலும் சில்லறையாகவும் இவை விற்பனை செய்யப்படுகின்றன. வழக்கத்தைவிட சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. தற்போது தக்காளி வரத்து தினமும் 350 டன் என உள்ளது. 

சென்னைக்கு தக்காளி வரத்து 30 சதவீதம் வரை குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில், ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஒரு வாரமாக ரூ.40க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி ஒரே நாளில் ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT