தமிழ்நாடு

வருமான வரித்துறை சோதனை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விளக்கம்

தூத்துக்குடி வி.இ.சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறையினர் சோதனை தொடர்பாக வங்கி நிர்வாகம் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி வி.இ.சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறையினர் சோதனை தொடர்பாக வங்கி நிர்வாகம் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வங்கி நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 285பிஏ-இன் கீழ் வருமான வரித்துறையினர், வங்கியில் உள்ள ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, அவர்கள் கேட்கும் விளக்கங்கள் மற்றும் விவரங்களுக்கு பதிலளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு தேவைப்படும் தகவல்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். வங்கியின் வணிகச் செயல்பாடுகள் வழக்கம்போல் நடைபெற்றன. இந்த சரிபார்ப்பு காரணமாக வங்கிப் பணியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவர்களின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT