தமிழ்நாடு

சிதம்பரம் கோயில் பிரச்னையில் அரசியல் கூடாது: பொன்.ராதாகிருஷ்ணன்

DIN

தஞ்சாவூர்: சிதம்பரம் கோயில் பிரச்னையில் அரசியல் செய்யக்கூடாது என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மாநில முன்னாள் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன்.

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

சிதம்பரம் கோயிலிலுள்ள கனக சபை மேடையில் நான் அதிக முறை தரிசனம் செய்துள்ளேன். மிகச் சில முறை கனக சபை தரிசனத்தை நிறுத்தி வைப்பர். இது பேசி முடிவு எடுக்க வேண்டிய விஷயம். இதில் அரசியல் செய்யக்கூடாது.

எதிர்க்கட்சிகள் கூடிக்கலைவது அவர்களுடைய பொழுதுபோக்கு. கொஞ்ச நாள் வேலை இல்லாமல் இருந்த அவர்கள், இப்போது கூடிக் கலைய தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி இருப்பது குறித்து எங்களுடைய தலைவர்கள் ஏற்கெனவே கூறியுள்ளனர். மற்ற விஷயங்கள் என்ன செய்வது என்பது குறித்து அகில இந்திய தலைமையும், மாநிலத் தலைமையும் மேற்கொள்ளும். 

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பம். நாங்கள் குடும்ப ஆட்சிதான் நடத்துகிறோம் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். திமுகவின் பிதாமகரான பேரறிஞர் அண்ணா சொன்ன வார்த்தை இது. அவரது குடும்பத்திலிருந்து யாராவது ஒருத்தர் இப்படி இருக்கிறாரா என திமுகவினரால் அடையாளம் காட்ட முடியுமா? எமர்ஜென்சி காலத்தில் சிறைக் கொடுமையின் காரணமாக காலமான சிட்டிபாபுவின் குடும்பத்திலிருந்து கட்சியில் யாரும் இருக்கின்றனரா? இதுதான் குடும்ப அரசியலா?

தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை பாராட்டுகிறேன். ஆனால் எங்கு மூடப்பட்டிருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

மணிப்பூரில் நிலவும் பிரச்னை வருத்தம் தரக்கூடியதுதான். அதை எப்படி சரி செய்வது என பிரதமரும் உள்துறை அமைச்சரும் முழுமையாக கவனம் செலுத்தி பணியாற்றி வருகின்றனர். இதை விமர்சனம் செய்வது குறைப்பிரசவம் போன்றது.

மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் உயிர் மற்றும் குடும்பத்தைக் காக்கக்கூடியது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT