தமிழ்நாடு

புதுக்கோட்டை: மின்னல் தாக்கி பெண் பலி!

ஆலங்குடி அருகே  மின்னல் தாக்கி பெண் வியாழக்கிழமை (ஜூன் 29) மாலை உயிரிழந்தார்.

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே  மின்னல் தாக்கி பெண் வியாழக்கிழமை (ஜூன் 29) மாலை உயிரிழந்தார்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பர விடுதியைச் சேர்ந்தவர் கோபு மனைவி வித்யா(30). கோபு வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கொத்தமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை மாலை கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழைபெய்யத் தொடங்கியபோது, வித்யா அவரது வீட்டு வாசலில் வேலை செய்துகொண்டிருந்தார்.

அப்போது, மின்னல் தாக்கியது. இதில், உடல் கருகிய நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் வித்யா உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT