தமிழ்நாடு

தில்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்

தலைநகர் தில்லியில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இன்று காலை  முதல் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

DIN

தலைநகர் தில்லியில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இன்று காலை  முதல் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கனமழையால் ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

இதுதொடர்பாக போக்குவரத்து காவலர் ஒருவர் கூறுகையில், 

ஜாமியா மெட்ரோ நிலையம் அருகே தண்ணீர் தேங்கி இருப்பதாக புகார் வந்தது. அதனைத்  தொடர்ந்து சாராய் காலே கான், ரிங் சாலை, கீதா காலனி, அக்ஷர்தாம் கோவிலுக்கு செல்லும் பகுதி என  தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்து குவிந்தது. மேலும், மத்திய தில்லியின்  காளி பாரி மார்க் பகுதியில் பலத்த மழையால் ஒரு மரம் வேரோடு சாய்ந்தது.

இதனால்,  சராய்காலே கான், ரிங் சாலை, கீதா காலனி, அக்ஷர்தாம் கோவிலுக்கு செல்லும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. மேலும் அந்த பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. 

தில்லியின் சில பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT