முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:38 AM
கோப்புப்படம்
பகிர்:

முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டின் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்களும், திரையுல பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

மேலும், நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளளார்.  முன்னதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்திலும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →