தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் நீா் வரத்து நின்றது: நீா்மட்டம் சரிவு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு வரும் நீர் வரத்து நின்றதால் அணையின் நீா்மட்டம் குறைந்து வருகிறது.

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு வரும் நீர் வரத்து நின்றதால் அணையின் நீா்மட்டம் குறைந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு வரும் நீர் வரத்து படிப்படியாகக் குறைந்ததையடுத்து, அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு நின்றது.

புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.95 அடி உயரமாக இருந்தது (மொத்த உயரம் 152). அணைக்குள் நீர் இருப்பு 2,619 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து இல்லாதாதல் தமிழகப் பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 467 கன அடியாகவும் இருந்தது. 

கடந்த பிப். 25 இல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9.39 கன அடியாக வந்த நீர்வரத்து மறுநாள் நின்றது. தொடர்ந்து 4 நாள்களாக அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணை, தேக்கடி ஏரி ஆகிய இடங்களில் மழை இல்லாததால் அணைக்குள் நீர் வரத்தும் இல்லை. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் குறைந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி பாடல்!

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

வண்ணக் கனவுகள்... சங்கவி!

மலர் சூடி... மானசா செளத்ரி!

ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண் போலீஸ்! திடீரென வீட்டுக்குள் நுழைந்த கணவன்! அப்புறமென்ன..?

SCROLL FOR NEXT