தமிழ்நாடு

சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 300 காளைகள், 500 வீரர்கள் பங்கேற்பு

DIN

நாமக்கல்: சேந்தமங்கலம் அருகே ஜங்களாபுரத்தில்  ஜல்லிக்கட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில், 300 காளைகள், 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஜங்களாபுரத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதனையொட்டி போட்டி நடைபெறும் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளர் ச.கலைச்செல்வன் ஆகியோர் அண்மையில் நேரில் ஆய்வு செய்தனர்.   தொடர்ந்து போட்டி நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்கப்பட்டது. 

அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 300 காளைகளும், 500க்கு மேற்பட்ட வீரர்களும் பங்கேற்று உள்ளனர். 

போட்டி தொடங்கிய நிலையில் வாடிவாசல் வழியில்  படுத்துக் கொண்ட காளை

வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று மடக்கி பிடித்தனர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் உடனுக்குடன் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஜல்லிக்கட்டு வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போட்டி தொடங்கிய நிலையில் வாடிவாசல் வழியில் காளை ஒன்று படுத்துக் கொண்டதால் போட்டி தொடங்குவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டது. 

வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மடக்கி பிடித்த வீரர்.

இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், நாமக்கல் கோட்டாட்சியர் த.மஞ்சுளா, துணை கண்காணிப்பாளர் எஸ்.சுரேஷ் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள்,  ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT