தமிழ்நாடு

முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்: தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்

DIN

வட மாநிலத்தவர் குறித்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாக முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்.  அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். 

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலியை மீண்டும் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

ஆழ்கடலில் சாகசப் பயணம்

ஏஐ எனும் ஏழாம் அறிவு

ஒரு பித்தனின் குறிப்புகள்

SCROLL FOR NEXT