முகப்பு
தமிழ்நாடு

திருச்செந்தூரில் மாசி தேரோட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தேரோட்டத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 

Updated On : 6 மார்ச், 2023 at 1:39 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:10 PM

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தேரோட்டத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 

திருச்செந்தூரில்  மாசிப்பெருந்திருவிழா கடந்த பிப்.25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. 

முதலில் பிள்ளையார் தேரும், சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்தார். அதன்பின் தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து நிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.