முகப்பு
தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல்வீச்சு

சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:40 AM
பகிர்:

சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. 

நாம் தமிழர் கட்சி அலுவலத்தை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது நாம் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவையினர் இடையே மோதல் ஏற்பட்டது. 

இருத் தரப்பினரும் மாறி மாறி கற்கள், பாட்டில்களை வீசித் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு காணப்பட்டது. இந்த சம்பவத்தில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. 

அருந்ததியினர் மக்களை சீமான் இழிவாக பேசியதாகக் கூறி ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →