தமிழ்நாடு

ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து சிதம்பரம் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும், சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப

DIN

சிதம்பரம்:  கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும், சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கடலூர் செவிலியர் கல்லூரி மருத்துவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. 

வாகனம் நிறுத்தும் இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள்.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும், மாத ஊதியம், ஊக்கத்தொகையை மாதந்தோறும் வழங்கக் கோரியும்,  முழுமையாக அரசு கையகப்படுத்தும் அரசாணை வெளியிட வலியுறுத்தியும், வரும் தமிழக அரசு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக் கல்லூரியின் கார் நிறுத்தம் செய்யும் இடத்தில் மருத்துவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT