தமிழ்நாடு

கூகுள் பே பயன்படுத்துபவரா நீங்கள்? உஷார்!

DIN

கூகுள் பே பயன்படுத்துபவருக்கு காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிரபல பண பரிமாற்ற செயலியான கூகுள் பேயில் புதிய வகை மோசடி நடந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

டீக்கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள், துணிக்கடைகள் மற்றும் இணைய வணிகப் பரிவர்த்தனைகள் உள்பட கூகுள் பே பயன்பாடு வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

கூகுள் பே மூலம் தினமும் லட்சக்கணக்கானோர் பணப்பரிவர்த்தனை செய்து வரும் நிலையில், சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை காவல் துறையினர்  வெளியிட்டுள்ளனர்.

யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது கூகுள் பே-க்கு பணத்தை அனுப்புகிறார். உங்களை அழைத்து தவறுதலாக பணம் அனுப்பப்பட்டது எனக் கூறி, திரும்ப அனுப்ப செல்கிறார். நீங்கள் அவருக்கு பணத்தை அனுப்பும் போது உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படுகிறது.

இதுபோல், யாராது உங்கள் கணக்கில் தவறாகப் பணம் அனுப்பிருந்தால், அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வந்து பணமாக பெற்றுச் செல்லுமாறு கூறுங்கள் என காவல் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT