பாஜகவை நம்பி திராவிட கட்சிகள்: அண்ணாமலை
திராவிட கட்சிகள் பாஜகவை நம்பி உள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
திராவிட கட்சிகள் பாஜகவை நம்பி உள்ளதாக அக்கட்சியின் தமிழக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனா். திராவிட கட்சிகளிலிருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாகக் கூறி வந்தனா். ஆனால், தற்போது பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன.
இணைய வழி சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநா் கையொப்பமிட்டாலும் கூட, அது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கத்தான் போகிறது என்று அதில் பதிவிட்டுள்ளாா் கே.அண்ணாமலை.