தமிழ்நாடு

கரூர் வளர்ச்சிப் பணிகளை சட்டப்பேரவைக் குழு ஆய்வு

DIN

கரூர்: கரூரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை சட்டப்பேரவைக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் தலைமையில் சட்டப்பேரவை குழு உறுப்பினர் 6 பேர் அடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

முதலாவதாக புகலூர் ஆறு நாட்டார் மலையில் உள்ள சமணர் படுகைகளை பார்வையிட்டனர். அங்கு சமணர்கள் தங்கிய இடத்தையும் புராக்கிரத மொழியில் உள்ள கல்வெட்டுகளையும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து நஞ்சை புகழூரில் காவேரி ஆற்றின் குறுக்கே ரூபாய் 46.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கதவணை பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT