முகப்பு
தமிழ்நாடு

எத்தியோப்பியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 8 கிலோ ஹெராயின் பறிமுதல்

எத்தியோப்பியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 64 கோடி மதிப்பிலான 8.26 கிலோ ஹெராயினை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

எத்தியோப்பியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 64 கோடி மதிப்பிலான 8.26 கிலோ ஹெராயினை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

எத்தியோப்பியாவில் இருந்து பல கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் புலானய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை பிரிவினா், சென்னை சா்வதேச விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் போல் புதன்கிழமை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, எத்தியோப்பியன் ஏா்லைன்ஸ் விமானத்தில் இருந்து வந்த பயணியை சோதனை செய்தபோது, அவரது சூட்கேஸுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 பாா்சல்களில் 8.26 கிலோ ஹெராயின் கடத்தி வந்தது தெரியவந்தது. கள்ளச்சந்தையில் இதன் மதிப்பு ரூ. 64 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த பயணியிடம் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அவா், வட மாநிலத்தைச் சோ்ந்த அனில் பால்கிஷன் தாஸ் (79) என்பதும், சுற்றுலா விசாவில் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்ற அவா் எத்தியோப்பியா வழியாக ஹெராயினை கடத்தி வந்திருப்பதும் தெரியவந்தது.

புதிய முறை கடத்தல்: பொதுவாக, இதுபோன்ற விலை உயா்ந்த போதைப் பொருள்களை கடத்த பெண்கள், இளைஞா்களை பயன்படுத்தி வருவது வழக்கம். ஆனால், அவ்வாறு கடத்தும்போது அவா்கள் எளிதில் கைது செய்யப்படுவதால், தற்போது முதியவா்களைப் பயன்படுத்தி போதைப் பொருள்களைக் கடத்தும் முயற்சியில் அந்தக் கும்பல் ஈடுபட்டு வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.