கோப்புப்படம் 
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளுக்கு ஒரு நாள் ஊதியம் நன்கொடை: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள்!

“நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

DIN

“நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும், இதற்கு தேவையான நிதியை வழங்கிடக் கோரியும் கோரிக்கை விடுத்தார். முதல்வர் ஸ்டாலினும் ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையினை நன்கொடையாக வழங்கினார்.

இந்தக் கோரிக்கைகயை ஏற்று, பல்வேறு அமைப்பினர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது ஒருமாத  ஊதியத்தினை “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” (நம்ம ஊர் பள்ளி) திட்டத்திற்காக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 200-க்கும் அதிகமான ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது மார்ச் மாத ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை இந்த திட்டத்திற்காக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT