முகப்பு
முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு

நீலகிரி மாணவி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர்

நீலகிரியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

தமிழ்நாடு

நீலகிரி மாணவி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர்

நீலகிரியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
முதல்வர் மு.க. ஸ்டாலின்
பகிர்:


நீலகிரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து முதல்வர் இன்று வெளியிட்ட அறிக்கையில், 

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம் மேற்கு கிராமத்தில் உதகமண்டலம் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6ம் தேதியன்று 4 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டனர் என்றும், இவர்களில் 4 மாணவிகளும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இதில் ஜெய்பா பாத்திமா, முகமது சலீம் என்ற மாணவி சென்னைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து வரும் வழியில் உயிரிழந்தார். 

மேலும், இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், நாசஜியா, ஜயாவுல்லா, ஆயிஷா, சர்புதீன் மற்றும் குல்தூண் நிஷா முகமது உசேன் ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும், சிகிச்சை பெற்று வரும்
மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →