தமிழ்நாடு

கோவை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி தங்கம் பறிமுதல்

DIN

கோவை: ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தப்பட்ட ரூ.3.8 கோடி மதிப்பிலான தங்கத்தை மத்திய வருவாய் பிரிவினர் கைப்பற்றினா்.

ஷாா்ஜாவில் இருந்து கோவை வரும் ஏா் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட உள்ளதாக சுங்க அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதன்படி, கோவை வந்த ஏா் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் மத்திய வருவாய் பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, விமானத்தில் வந்த 11 பேர் தங்களது பேண்ட், உள்ளாடைகள் மற்றும் மலக்குடலில் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 6.62 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.3.8 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வியாபாரியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

பழனி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று கொடியேற்றம்

செங்கல்பட்டு: இரு விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு

பைக் மோதியதில் கடமான் பலி

சிவகங்கை நகராட்சி குப்பை லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT