தமிழ்நாடு

அய்யம்பட்டியில் களைகட்டும் ஜல்லிக்கட்டு விழா!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பேட்டியில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

அய்யம்பட்டி ஸ்ரீ  வல்லடிகார சுவாமி ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. 

முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. சஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே. உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்கள் உறுதிமொழி ஏற்று போட்டியில் பங்கேற்றனர்.

620 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அதன் திமிலை பிடித்து அடக்கி தங்க காசு ,பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளைப் பெற்று வருகின்றனர். அதேபோல மாடுகளும் வீரர்களிடம் சிக்காமல் தனது உரிமையாளர்களுக்கு பரிசை பெற்று கொடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT