ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவிட்டதா? உயர் நீதிமன்றம்
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
சென்னை: அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக பொதுக் குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளது உயர் நீதிமன்றம்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பொதுக்குழு குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இந்த மனு காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் அளித்தது.
இதையடுத்து, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் இக்கேள்வியை எழுப்பியிருக்கிறது.