தமிழ்நாடு

சீர்காழி அருகே வீட்டில் புகுந்திருந்த நல்ல பாம்பு மீட்பு

சீர்காழி அருகே  வீட்டில் புகுந்திருந்த நல்ல பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

DIN

சீர்காழி அருகே  வீட்டில் புகுந்திருந்த நல்ல பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த செம்மங்குடி பகுதியை சேர்ந்தவர் விஜயபாலன். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு சவாரி  ஓட்டி வருகிறார்.

இந்நிலையில் இவர் வீட்டில் அமர்ந்திருந்த போது வீட்டின் சமையலறையில் இருந்த சமையல் எரிவாயு உருளையின் அடியில் ஏதோ ஊர்வது போல் இருந்ததைக் கண்டு அருகில் சென்று பார்த்தார்.

அப்போது சமையல் எரிவாயு உருளையின் கீழ் உள்புறத்தில் நல்ல பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.  உடனடியாக இது குறித்து சீர்காழி புளிச்சகாடு பகுதியை  சேர்ந்த பாம்பு பிடி இளைஞர்  தினேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்தார்.

பாம்பு பிடி இளைஞர்  தினேஷ் விரைந்துச் சென்று சமையல் எரிவாயு உருளையின் அடியில் புகுந்திருந்த 3 அடி நீளம் கொண்ட  நல்ல பாம்பினை  பிடித்து,  பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து   ஆள் நடமாட்டம் இல்லாத வனப் பகுதியில் கொண்டு விட்டார்.

வீட்டின் சமையலறையில் நல்ல பாம்பு இருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள்  அதிர்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கமே.. சம்யுக்தா ஷான்!

மலரில் மலர்ந்த கனவு... அய்ரா கிருஷ்ணா!

மாஞ்சோலை... அனீத்!

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகே... ஸாரா யஸ்மின்!

அமைதி கிடைத்த இடம்... செளந்தர்யா!

SCROLL FOR NEXT